Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

321 மாணவருக்கு ஸ்மார்ட்போன் வழங்கிய ஆசிரியைக்கு விருது: டெல்லி அரசு கவுரவம்

செப்டம்பர் 08, 2021 02:15

டெல்லி: டெல்லியின் ரோகிணி 8-வது செக்டாரில் டெல்லி அரசின் சர்வோதயா வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு ஏழை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கின் றனர். கரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கியபோது, இப்பள்ளியின் பல மாணவர்களால் வகுப்புகளில் பங்கேற்க முடிய வில்லை. ஸ்மார்ட் போன் வாங்க அவர்களுக்கு வசதி இல்லாததே இதற்கு காரணம் ஆகும்.

இந்நிலையில் இப்பள்ளியில் துணை முதல்வராக பணியுரியும் பாரதி கல்ரா, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலமாக 321 ஸ்மார்ட் போன்களை சேகரித்தார். அவற்றை ஏழை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை ஆன்-லைன்வகுப்புகளில் பங்கேற்க செய்தார். இந்நிலையில் ஆசிரியை பாரதி கல்ராவுக்கு டெல்லி அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.

இதுகுறித்து பாரதி கல்ரா கூறும்போது, “ஒரு மாணவரின் தந்தை கரோனாவால் உயிரிழந் தார். அவரிடம் ஸ்மார்ட் போன்வாங்கும்படி என்னால் கூற முடியவில்லை. அவருக்கு நானே போன் வாங்கிக் கொடுத்தேன். பிறகு பல மாணவர்களுக்கு இப்பிரச்சினை இருந்தது. இதையடுத்து பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் தங்களின் வாட்ஸ்-அப் குழுக்களில் மாணவர்களுக்கு உதவி கோர முடிவு செய்தோம்" என்றார்.

தலைப்புச்செய்திகள்