Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது - ரஷ்ய தூதர் பேச்சு

செப்டம்பர் 07, 2021 10:24

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது  இந்தியா - ரஷ்யாவின் பொதுவான கவலை என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் நிலவரம் கவலை அளிக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு பயங்கரவாதத்தை பரப்ப உதவும் நாடாக ஆப்கானிஸ்தான்  மாறக்கூடாது. இதில் இந்தியா, ரஷ்யா இடையே ஒருமித்த கருத்து உள்ளது. எத்தகைய பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும். 

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன. தெற்காசியாவில் நிலைத்தன்மை ஏற்படுவதற்கு ஆப்கனிஸ்தானில் நிலைத்தன்மை இருப்பது முக்கியமானது என தெரிவித்தார். 
 

தலைப்புச்செய்திகள்