Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செப்டம்பர் 03, 2021 03:47

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்றுள்ளார்.

இந்நிலையில், பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

பாராலிம்பிக்கில் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பிற்கு கிடைத்தவை. அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்