Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி

செப்டம்பர் 01, 2021 03:50

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கொள்ள தடுப்பூசி ஒன்று மட்டுமே பேராயுதமாக கருதப்படுகிறது. கொரோனா 3-வது அலையின் அச்சமும் மக்களை பயமுறுத்துகிறது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவல ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பணியில் ஈடுபட முடியும் என்று அரசு அறிவித்துள்ளதால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறப்பு முகாம்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1, 2, 3 லட்சம் என்று படிப்படியாக தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.

நேற்று முன்தினம் 5 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 26-ந் தேதி 5 லட்சத்து 72 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இது அதிகபட்ச பதிவாக தெரிவிக்கப்பட்டது. இதனை நேற்றைய பதிவு முறியடித்தது. நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே இதுவரையில் அதிகபட்ச அளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்