Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்துணவு அமைப்பாளர்களுக்கு சமையல் போட்டி

ஆகஸ்டு 13, 2021 04:20

திருப்பூர்: சத்துணவு திட்டத்தின்கீழ் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான சமையல் போட்டி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடந்தது. சமூகநலம் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை முன்னிலை வகித்தார்.

சிறந்த சமையலர், உதவியாளர், அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அடுப்பு இல்லாத சமையல் என்ற தலைப்பில் கேக், ஜூஸ், புரூட் சாலட் செய்து அசத்திய 3 பேர், சிறந்த முறையில் கிச்சன் தோட்டம் அமைத்த 3 பேர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்