Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரி வழக்கு

ஆகஸ்டு 10, 2021 11:28

தேசிய விளையாட்டாக ஹாக் கியை அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரிதாக்கல் செய்துள்ள இந்த மனுவில், "ஒலிம்பிக்கில் இடம்பெறும்விளையாட்டுகளை ஊக்குவிக்குமாறு மத்திய மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும். ஹாக்கி தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் அது அரசாங்கத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீரிக்கப்பட வில்லை. ஹாக்கி விளையாட்டில் இந்தியா எப்போதுமே சிறந்த ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக் ஹாக்கியில் பாராட்டை பெறாதது துரதிருஷ்டவசம்தான். இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்த முறை, ஹாக்கியில்இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. எனவே,ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்