Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான்காம் கட்ட மக்களவை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

ஏப்ரல் 29, 2019 05:14

மத்திய பிரதேசம்: மக்களவைக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் இன்றைய தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  

தலைப்புச்செய்திகள்