Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மானியக்கடன்

ஆகஸ்டு 06, 2021 03:15

திருப்பூர்: மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும்  வகையில் பிரதமர் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-25 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும்.

கலெக்டர் தலைமையில் இயங்கும் குழு இத்திட்டத்தில் வழிகாட்டுதல் வழங்கும். ஏற்கனவே இயங்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்துவது, உட்கட்டமைப்பை பெருக்குவது, புதிய நிறுவனம்  தொடங்குவது, வர்த்தக முத்திரை பதிவு, வியாபார கட்டமைப்பு போன்ற தேவைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற வகையில் பொருட்களை தேர்வு செய்து உணவு பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நிறுவனங்கள், திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெறும் வாய்ப்புள்ளது. மேலும்  விவரங்களுக்கு 9865678453 என்ற எண்களிலும் ddab.coimbatore2@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்