Thursday, 6th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பந்தல் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஜுலை 31, 2021 03:16

மடத்துக்குளம்: உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் அன்றாட வருவாய் ஈட்டும் வகையில் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறி வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.

அதில் கூடுதல் லாபம், குறுகிய கால பயிர், மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு போன்ற காரணங்களால் பந்தல் காய்கறி ரகங்களை அதிகம் பயிரிடுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தென்னை, கரும்பு, வாழை என பணப்பயிர் சாகுபடி செய்வோருக்கு  ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பலன் கிடைக்கிறது. அதேநேரம் காய்கறி சாகுபடியில்  தினமும் வருவாய் ஈட்ட முடிகிறது.

குறிப்பாக புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கோவைக்காய், அவரை உள்ளிட்ட பந்தல் காய்கறி ரகங்களுக்கு போதுமான விலை கிடைக்கிறது. பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்படுவதன் வாயிலாக, குறைந்த முதலீட்டில் பயிரிட்டு எக்டருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்