Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை பொருட்கள் விற்கப்படுவதில்லை-கடைகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டிய வியாபாரிகள்

ஜுலை 30, 2021 03:59

திருப்பூர்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பிறப்பித்த உத்தரவில் தடை செய்த புகையிலைப் பொருள் விற்பனை செய்தால் சிறிய கடையாக இருந்தாலும் சரி அவற்றை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார், சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனர். அந்த வகையில் திருப்பூர் நகரப் பகுதியில் அதிகாரிகள் குழு இணைந்து நடத்திய சோதனைகளின் போது 100க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  

இந்தநிலையில் அதிகாரிகள் நடவடிக்கை கடுமையாக இருப்பதால் பல்வேறு கடைகளில் அதன் உரிமையாளர்கள், எங்களது கடைகளில் போதை பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பை போர்டை தொங்கவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்