Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

ஜுலை 29, 2021 03:26

நாமக்கல்: பறவை காய்ச்சல் பீதி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 20-ந்தேதி முதல் ரூ.5.15 ஆக இருந்த முட்டை விலை கடந்த 26-ந்தேதி 15 காசுகள் குறைந்து ஒரு முட்டை ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் விரதமிருப்பது, வட மாநிலங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வாகனங்கள் செல்லாதது, முட்டைகள் தேக்கம் போன்றவற்றால் விலையில் மாற்றம் செய்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்