Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்

ஜுலை 28, 2021 10:37

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக ஓபிஎஸ், பழனிசாமி கடந்த23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல்வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இதை கண்டித்து ஜூலை 28-ம் தேதிஅதிமுகவினர் அவரவர் வீடுகள் முன்பு பதாகைஏந்தி முழக்கம் எழுப்பி போராட வேண்டும்’ எனவேண்டுகோள் விடுத்தனர். 

அதன்படி, தமிழகம்முழுவதும் இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் அவரவர் வீடுகள் முன்பு பதாகை ஏந்திபோராட்டம் நடத்த உள்ளனர். சொந்த ஊரானதேனியில் ஓபிஎஸ்ஸும், சேலத்தில் பழனிசாமியும் போராட்டம் நடத்துகின்றனர்.

தலைப்புச்செய்திகள்