Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆக., 2 வரை இந்திய விமானங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை

ஜுலை 27, 2021 11:19

புதுடெல்லி : இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஆக., 2ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் இருந்து யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் சர்வதேச விமான சேவைகள், ஏப்., 24 ல் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், இந்திய விமானங்களுக்கான தடை, ஆக., 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து யு.ஏ.இ., ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய விமானங்களின் வருகைக்கு ஆக., 2ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்