Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வயநாட்டில் ராகுல் அலை

ஏப்ரல் 26, 2019 05:21

கேரளா: கேரளாவில் விவிஐபிக்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மட்டுமல்ல வாக்குப்பதிவின் போதும் அனல் அடித்தது.

வயநாட்டில் ராகுல் வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திலிறங்கினார். உடன் ப்ரியங்கா காந்தியும் சென்றது அங்குள்ள வாக்காளர்கள் மத்தியில் மட்டுமல்ல கேரளாவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.எம்.மின் சுனீர், பா.ஜ.க.வின் ஆதரவோடு போட்டியிட்ட மாநில இந்து அமைப்பான பி.டி.ஜே.எப்.பின் வேட்பாளர் துஷார் வென்னாப்பள்ளி போன்றவர்களின் போட்டியும் பிரச்சாரமும், ராகுலுக்குச் சவாலாக இருந்தாலும் அதையும் தாண்டி ராகுல் அலை சுனாமி போன்று அடித்தது. 

அதன் வெளி்ப்பாடுதான், நடந்த பல்வேறு தேர்தல்களின் போது வாக்குப் பதிவுகளில் ஆர்வம் காட்டாத மலைவாழ் தாழ்த்தப்பட்டவர்கள், மற்றும் மலைவாழ் பழங்குடி இனமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தது என்கிற அரசியல் பார்வையாளர்கள், இவைகள் ராகுலுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

தமிழகம் போன்று, வாக்குகள் அங்கே ஏலம் போகவில்லை.

தலைப்புச்செய்திகள்