Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் லஷ்கர் கமாண்டர் சுட்டுக்கொலை

ஜுலை 20, 2021 11:27

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் –இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், செக் சாதிக் கான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அங்கு விரைந்தனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப் பின் உயர் கமாண்டர்களில் ஒருவரான இஷ்ஃபக் தார் என்கிற அபு அக்ரம் ஆவார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் செயல்பட்டு வருகிறார். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த 2017—ல் பணியை விட்டு விலகி தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். தெற்கு காஷ்மீரில் ஜனிபோரா கிராமத்தில் கடந்த 2018-ல் 4 போலீஸார் கொல்லப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளது.

பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல்கள், அப்பாவி மக்கள் கொலை, இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுதல் ஆகியவற்றை திட்டமிட்டுவதிலும் செயல்படுத்துவதிலும் அபு அக்ரம் முக்கிய கருவியாக இருந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்