Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலியல் வழக்கில் பூசாரிக்கு சாகும் வரை சிறை

ஜுலை 16, 2021 04:51

தூத்துக்குடி:  தூத்துக்குடிமாவட்டம் முக்கானியைச் சேர்ந்த மாசானமுத்து(57), சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியாக உள்ளார். 2019-ல்தரிசனத்துக்கு வந்த பெண்ணிடம், அவரது 15 வயது மகளை ராமேசுவரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பரிகாரம் செய்தால் உடல்சரியாகும் என கூறியுள்ளார்.

பின்னர், சிறுமியை அழைத்துச் சென்று ராமேசுவரம் விடுதியில் தங்க வைத்த மாசானமுத்து, பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி அங்கிருந்து தப்பி, ராமேசுவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாசானமுத்துவை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதிசுபத்ரா, மாசானமுத்துவை உயிர்போகும் வரை சிறையில் அடைக்கவும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
 

தலைப்புச்செய்திகள்