Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை: மா.சுப்பிரமணியன்

ஜுலை 08, 2021 03:59

சென்னை: கொரோனா 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம் என்றும், தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். அதனால் புதிதாக பதவியேற்ற சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க சென்னை பகுதியில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் டுரோன் வழியாக கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. லாம்டா வகை வைரஸ் பாதிப்பு உலகளவில் ஏற்பட்டாலும் அந்த வகை வைரஸ் நமது நாட்டிற்குள் நுழையாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரு நாள் உற்பத்தியாக உள்ளது. எனவே மூன்றாவது அலை பரவினாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் தற்போது வரை ஒரு கோடியே 59 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1.74 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. கொரோனா 3வது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், ஆக்சிஜனை சேமிப்பது மிக அவசியம். தொற்றின் எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம். தற்போது ஆக்சிஜனை சேமிக்கலாம். அதனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்