Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசத்துரோக வழக்கு- நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு சிக்கல் நீடிப்பு

ஜுலை 03, 2021 10:30

திருவனந்தபுரம்: லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக பேசினார். லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிரான இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாஜக தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவின் கவராத்தி போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ஆயிஷா, ஐகோர்ட் உத்தரவின்பேரில் லட்சத்தீவில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அதேசமயம், தன் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு தடை கோரி ஆயிஷா சுல்தானா, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். 

விசாரணை துவக்க நிலையில் இருப்பதால், விசாரணை அமைப்புகளுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி லட்சத்தீவு நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்