Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா 2-வது அலை ஓயவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

ஜுலை 03, 2021 10:27

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டது. இப்போது 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது தொற்று பரவலும், உயிரிழப்பும் குவைாகவே உள்ளது.
 
தொற்று பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில், பரவலை குறைப்பதற்காக அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்தில் 71 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொதுமக்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை குறைக்க முடியாது. குறைக்கவும் கூடாது.

கடந்த மாதம் 21ம் தேதி முதல் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 34 கோடி மக்களுக்கு ஒரு 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 80 சதவீத சுகாதார பணியாளர்கள், 90 சதவீத முன்கள பணியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்