Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலைக்கிராமத்தில் 13 சிறுவர்களுக்கு கொரோனா

ஜுலை 02, 2021 10:47

ஊட்டி: நீலகிரி மாவட்டம் புத்தூர்வயல் ஆதிவாசி கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 வயது முதல் 14 வயது வரை உள்ள 13 சிறுவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று பாதித்த 13 சிறுவர்களை சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயன்றனர். 

இதற்கு அவர்களது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகளை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் அதிகாரிகள் சமரசம் செய்து 13 சிறுவர்களையும் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்