Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அப்பல்லோவில் அனுமதி

ஏப்ரல் 25, 2019 06:22

சென்னை: திமுக தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்  உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்தவர்கள், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் ஆலோசனையின் படி ஓரிரு நாளில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது. அதுவரை அவருக்கு மற்ற மருத்துவசோதனைகள் நடைபெறுகின்றன.  மற்ற மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ.வானர் கு.க.செல்வம்.  


 

தலைப்புச்செய்திகள்