Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சம்பளத்தில் பாதிக்கு மேல் வரி செலுத்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜுன் 29, 2021 10:19

புதுடெல்லி:உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சொந்த ஊரின் அருகில் ரெயில் நிலையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பொதுமக்கள் தேசத்திற்கு வரி செலுத்துவது கடமை என வலியுறுத்தினார். அவர் பேசியதாவது:-

சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. ரெயிலை வலுக்கட்டாயமாக நிறுத்துகிறோம். ரெயிலுக்கு தீ வைத்தால் யாருக்கு இழப்பு? இது அரசு சொத்து என்று மக்கள் கூறுகிறார்கள். அது வரி செலுத்துவோரின் பணம். 

எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதால் நான் இதைக் குறிப்பிடுகிறேன். ஜனாதிபதி என்பவர் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர், ஆனால் அவரும் வரி செலுத்துகிறார். நான் ஒவ்வொரு மாதமும் 2.75 லட்சம் ரூபாய் வரி செலுத்துகிறேன். எல்லோரும் எனக்கு ஒரு மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறுகிறார்கள், ஆனால் அதற்கும் வரி விதிக்கப்படுகிறது. 

நான் சேமிப்பதை விட நமது அதிகாரிகள் அதிகம் சம்பாதிக்கிறார்கள், ஆசிரியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இந்த வரிகள் வளர்ச்சிக்கு பயன்படும் என்பதை விளக்குவதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்