Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக்னி ஏவுகணை வரிசையில் இது புதுசு... வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

ஜுன் 29, 2021 10:18

புதுடெல்லி: இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி பிரைம்' ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலைதூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. ஏவுகணையானது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து மிகத்துல்லியமாக இலக்கை அடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை ஆயுதமான அக்னி பிரைம், 1,000 முதல் 2,000 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கவல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, உள்நாட்டில் தயாரிப்பான 'பினாக்கா' ராக்கெட்டின், தாக்குதல் தூரம் மேம்படுத்தப்பட்ட புதிய வகையை வெற்றிகரமாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்