Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம்- சசிகலா குற்றச்சாட்டு

ஜுன் 26, 2021 10:21

சென்னை: சசிகலா தினமும் தொலைபேசி மூலம் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அவர் பேசும் உரையாடல் ‘ஆடியோ’ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சசிகலா, பொன்னமராவதியை சேர்ந்த பாரதிராஜா என்ற தொண்டரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் சசிகலா பேசியதாவது:-

இந்த தேர்தலில் ஜெயலலிதா செய்த சாதனைகளை சொல்லவில்லை. அதை நினைத்து நான் ரொம்ப வேதனைப்பட்டேன். ஜெயலலிதா முகத்தையே விளம்பரங்களில் பார்க்க முடியவில்லை. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். அ.ம.மு.க.வும் பிரிந்திருக்க கூடாது. எல்லாரும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இப்போது ஆட்சியை இவர்களே தூக்கி கொடுத்தது போல் தெரிகிறது.

எவ்வளவு பெரிய கட்சியாக இருந்ததை இன்றைக்கு 4, 5 பேரின் கட்சியாக மாற்றியதை நிச்சயம் மாற்றி காட்ட வேண்டும் என பேசினார்.

தலைப்புச்செய்திகள்