Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 286 பேர் பாதிப்பு

ஜுன் 23, 2021 09:55

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. இதில் 1939 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1156 ஆக உயர்ந்துள்ளது. 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்