Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பயாலஜிகல்-இ தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும்: மத்திய அரசின் கரோனா செயற்குழு தலைவர் தகவல்

ஜுன் 18, 2021 12:33

புதுடெல்லி: உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பயால ஜிகல்-இ தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என மத்திய அரசின் கரோனா செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம் கரோனா தடுப்பூசியை தயாரித்துள் ளது. பரிசோதனை நிலையில் உள்ள இந்த தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் கரோனா செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறியதாவது:

அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசியை நம் நாட்டில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இது, கரோனா வைரஸ்களுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டது. இந்த தடுப்பூசி குறைவான விலையில் கிடைக்கும்.

இதுபோல நம் நாட்டைச் சேர்ந்த பயால ஜிகல்-இ நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘கார்ப் வேக்ஸ்’ தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை யில் உள்ளது. இதுவும் நோவாவாக்ஸைப் போல 90% திறன் கொண்டதாக இருக்கும் என பயாலஜிகல்-இ நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை ரூ.250 ஆக நிர்ண யிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜைடஸ்-கடிலா நிறுவனத்தின் தயா ரிப்பான கரோனா தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த ஜென்னோவா பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆர்என்ஏ அடிப்படையிலான உள்நாட்டு தடுப்பூசியான இது, இப்போது 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. இது வரும் செப்டம்பரில் பயன் பாட்டுக்கு வரும். விலை குறைவான, அதே நேரம் அதிக திறன் வாய்ந்த கரோனா தடுப்பூசிக்கு உலகின் நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் இந்தியாவை பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்