Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழல் பணத்தால் பிரதமர் பதவியை வாங்க முடியாது : மம்தாவை சாடிய பிரதமர் மோடி

ஏப்ரல் 24, 2019 07:26

மேற்கு வங்காளம்: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடும் மோதல் பிரசாரம் காணப்படுகிறது. மம்தாவை பிரதமர் மோடி வளர்ச்சியை தடுக்கும் ஸ்பீடு பிரேக்கர் எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடி ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர் என மம்தாவும் வசைப்பாடி வருகிறார்.  

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி,  மம்தா பானர்ஜியை கடுமையாக சாடுகையில், “பிரதமர் பதவி ஏலம் விடப்பட்டால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் செய்த பணத்தின் மூலமாக அதனை வாங்க முயற்சிக்கும். ஆனால் பிரதமர் பதவியை பணத்தால் வாங்க முடியாது” என்றார். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இல்லாது மத்தியில் ஆட்சியமையும், பிராந்திய கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவார் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியிடம் இருந்து இதுபோன்ற பதிலடி வந்துள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்திற்கு இப்போது மக்கள் வருவதில்லை. எனவே, வெளிநாட்டில் இருந்து நடிகரை கொண்டு வந்து பிரசாரம் செய்யும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்