Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 64.66 சதவீதம் வாக்குப்பதிவு

ஏப்ரல் 24, 2019 07:19

புதுடெல்லி: 17-வது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 17-வது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

அதில் இன்று மாலை நிலவரப்படி, அஸ்ஸாம்: 78.29 சதவீதம் (4 தொகுதிகள்), பீகார்: 59.97 சதவீதம் (5 தொகுதிகள்), சத்தீஸ்கர்: 65.91 சதவீதம் (7 தொகுதிகள்), தாத்ரா நாகர் ஹவேலி: 71.43 சதவீதம் (1 தொகுதி), டாமன் டையு: 65.34 சதவீதம் (1 தொகுதி), கோவா: 71.09 சதவீதம் (2 தொகுதிகள்), குஜராத்: 60.21 சதவீதம் (அனைத்து 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு), ஜம்மூ & காஷ்மீர்: 12.86 சதவீதம் (1 தொகுதி), கர்நாடகா: 64.14 சதவீதம் (14 தொகுதிகள்), கேரளா: 70.21 சதவீதம் (அனைத்து 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு), மகாராஷ்டிரா: 56.57 சதவீதம் (14 தொகுதிகள்), ஒடிஸா: 58.18 சதவீதம் (6 தொகுதிகள்), திரிபுரா: 78.52 சதவீதம் (1 தொகுதி), உத்தரப் பிரதேசம்: 57.74 சதவீதம் (10 தொகுதிகள்), மேற்கு வங்கம்: 79.36 சதவீதம் (5 தொகுதிகள்) வாக்குகள் பதிவானது.

தலைப்புச்செய்திகள்