Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்கா பிரீமியர் லீக்- 3 போட்டிகளில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை

ஜுன் 13, 2021 11:34

டாக்கா: வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் முகமதியன் விளையாட்டுக் கழகம் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகள் மோதின. இதில், முகமதியன் விளையாட்டுக் கழக அணி கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் அசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார். இதேபோல் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.

அவர் கோபத்தில் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின. ஷாகிப்பின் இந்த செயலை பலரும் கண்டித்தனர். பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஷாகிப்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 3 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை விதித்தது. அத்துடன் 5 லட்சம் வங்காளதேச டாக்கா அபராதமும் விதித்தது.
 

தலைப்புச்செய்திகள்