Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரக்கு ரெயில் வருகை-தொழிலாளர்கள் மகிழ்ச்சி

ஜுன் 12, 2021 06:12

திருப்பூர்: அரிசி, கோதுமை, சோளம், சோயா புண்ணாக்கு, மக்காச்சோளம், கோழித்தீவனம் உள்ளிட்டவை வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது. அவை காங்கயம், பல்லடம், உடுமலை என மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஊரடங்கு,கொரோனா பாதிப்புக்கு முன் வாரத்துக்கு நான்கு சரக்கு ரெயில் வந்தன. அவற்றில் இருந்து மூட்டைகளை இறக்கி லாரியில் ஏற்றி அனுப்பும் பணி நடக்கும்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்கள் சிலவற்றில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மே இறுதி வாரத்தில் சரக்கு ரெயில் வரத்து சற்று குறைந்தது. ஊரடங்கில் திருப்பூர் கூட்ஸ்ஷெட் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் பலர் வந்து சரக்கு ரெயில் வருமா? என காத்திருந்தனர். வாரம் 2 ரெயில் மட்டுமே வந்தது.நடப்பு வாரம் வந்த 4 ரெயில்களில் அரிசி, கோதுமை, கோழித்தீவனம் வந்துள்ளன. இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள், 50க்கும் அதிகமான லாரி டிரைவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. சரக்கு ரெயில் வருகையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்