Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி

ஜுன் 12, 2021 06:06

பெங்களூரு: பெங்களூரு குருராகவேந்திரா லே-அவுட்டில் ஒரு பெண் வசிக்கிறார். அவருக்கு, தனியார் திருமண தகவல் மையம் மூலமாக லண்டனில் வசிக்கும் பிரேம்பசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக பிரேம்பசு தெரிவித்தார். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய பெங்களூருவுக்கு வருவதாகவும், அவருக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி வருவதாகவும் பிரேம்பசு கூறியுள்ளார். ஓரிரு நாளில் அந்த பெண்ணிடம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி, ஒருவர் பேசினார்.

லண்டனில் இருந்து வந்துள்ள பிரேம்பசுவிடம் கொரோனா பரிசோதனை அறிக்கை இல்லை, அவரிடம் ரூ.2 கோடிக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் இருப்பதால், அவரை கைது செய்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் வரிசெலுத்தும்படி பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அதிகாரி கூறிய வங்கி கணக்குக்கு ரூ.10 லட்சத்தை அப்பெண் அனுப்பியுள்ளார். அதன்பிறகு, பிரேம்பசு, அதிகாரி எனக்கூறி பேசிய நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால், அந்த பெண்ணால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் தன்னிடம் ரூ.10 லட்சம் வாங்கி பிரேம்பசு மோசடி செய்துவிட்டதை அவர் உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்