Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு

ஜுன் 12, 2021 05:32

சென்னை:  சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ வசதிகள் குறித்து சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், மாநில கோவிட் கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் தரேஷ் அகமது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பிரதிநிதிகள் டாக்டர் மனோஜ் முரேக்கர், டாக்டர் கணேஷ்குமார் பரசுராமன், டாக்டர் பிரப்தீப் கவுர் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும், காய்கறி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அவ்வப்போது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலம் உயர் ரத்த ஆழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? என்பதையும் கேட்டறிந்து அதனடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்