Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் -மேற்கு வங்காள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜுன் 11, 2021 05:35

புதுடெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும்  அரசு உதவிகளை பெறுவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச  நீதிமன்றம் வலியுறுத்தியது.

மற்றொரு சிக்கலை மேற்கோள் காட்ட முடியாது என்றும், இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்