Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீம்ஸ்களை ரசிக்கிறேன்: மோடி

ஏப்ரல் 24, 2019 05:26

குஜராத்: நான் பிரதமராக வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றே நினைத்தேன். மிகவும் இளம் வயதிலேயே எனது தாயை பிரிந்து வந்து விட்டேன். ராமகிருஷ்ணா மிஷனின் தாக்கம் என்னிடம் இருந்ததால் சன்னியாசி ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன்.  

எம்எல்ஏ., ஆகும் வரை எனக்கு வங்கி கணக்கு இருந்ததில்லை. நான் பிரதமராக வேண்டும் என எனது குடும்பத்தினரும் ஆசைப்படவில்லை. குஜராத் முதல்வராகும் வரை எனது துணிகளை நானே தான் சுத்தம் செய்வேன். நான் கோபப்படாமல் இருப்பதை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவார்கள். கோபப்படுவதற்கான சூழலை நான் உருவாக்கிக் கொள்வதில்லை. பிரச்னைகளை தீர்க்கவே நான் விரும்புவேன். மம்தா ஒவ்வொரு ஆண்டும் எனக்கு ஒன்று முதல் 2 குர்தாக்களை பரிசாக அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது நிறைய நண்பர்கள் எதிரணியில் உள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவது நன்றாக உள்ளது. 

நான் எனது பணியில் 100 % அர்பணிப்பை அளிப்பேன். எனது அணியினரையும் கடுமையாக உரைக்க ஊக்குவிப்பேன். எனக்கு மாம்பழங்கள் மிகவும் பிடிக்கும். சுயசரிதைகளை தேடி தேடி படிப்பேன். மக்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நம்மை பின்தொடர்ந்து வரும். ஓய்வு பற்றி நான் நினைத்ததே இல்லை. மனித வளத்திற்காக மட்டுமே எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் அளித்துள்ளேன். 

மீம்ஸ்களை உருவாக்குபவர்களை பாராட்டுகிறேன். அதை மிகவும் ரசிக்கிறேன். இந்த நாடு தான் என் குடும்பம். தற்போது நகைச்சுவையாக பேசுவதை தவிர்த்து வருகிறேன். டிஆர்பி ரேட்டிங்கிற்காக எனது வார்த்தைகள் தவறாக திரித்து பயன்படுத்தப்படலாம் என்ற பயம் காரணமாக நகைச்சுவையாக பேசுவதில்லை. அதிகாலை 5 மணிக்கும், மாலை 6 மணிக்கும் டீ குடிப்பதின் மூலமே நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. நான் டீ விற்ற போது நிறைய கற்றுக் கொண்டேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 
 

தலைப்புச்செய்திகள்