Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரணாசியில் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் போட்டி

ஏப்ரல் 23, 2019 11:21

வாரணாசி: மோடியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் என்ற பெண் வேட்பாளரை செய்தியாளர்கள் முன் அறிவித்தார் அகிலேஷ் யாதவ்.  

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது என்று பரபரக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரியங்கா பேசியுள்ளார்.  

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக, பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின்படி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார்' என்று கூறினார். மேலும் பிரதமரை எதிர்த்து போட்டியிட மகிழ்ச்சியுடன் இருப்பதாக பிரியங்கா தெரிவித்தார்.  

2019 நாடளுமன்ற தேர்தலை குறிவைத்து கடந்த பிப்ரவரியில் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராகவும், காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்தவொரு தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

தலைப்புச்செய்திகள்