Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்

ஜுன் 09, 2021 05:20

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  சுஷில் சந்திரா கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதியில் இருந்து தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14-ம் தேதி முடிவடைகிறது.

அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரான சுஷில் சந்திரா, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் பற்றி இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனை வகை செய்யும் ஒப்புதல்கள் கோரப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற அனுபவம் கொண்டவர்.

தலைப்புச்செய்திகள்