Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புற்றுநோய் சிகிச்சைக்கு இரண்டு மடங்கு கட்டணம் பெற்ற நீலம்பூர் ராயல்கேர் மருத்துவமனை மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மே 30, 2021 07:15

கோவை: கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ள நீலம்பூர் ராயல் கேர் மருத்துவமனை இரண்டு மடங்கு கட்டணம் வசூலித்ததாகவும், மேற்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இறந்து விட்டதால் மருத்துவ செலவு போக மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் இறந்த நோயாளியின் மகன் மனு அளித்தார்.

கரூர் மாவட்டம் எஸ்.வெல்லாலப்பட்டி கிராமம் தில்லை நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் டெய்லர் தொழில் செய்து வந்தார். இவருக்கு இந்த மாதம் 6 ஆம் தேதி புற்றுநோய் காரணமாக நீலம்பூர் ராயலகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

முதல்கட்ட சிகிச்சை முடிந்து 9 ஆம் தேதி வீடு திரும்பினர். முன்னதாக மருத்துவமனையில் இரண்டாவது தவணை சிகிச்சைக்கும் சேர்த்து ரூ‌.2,56,987 செலுத்தி விட்டு வீடு திரும்பினர். இரண்டாவது தவணை சிகிச்சைக்கு முன்னதாகவே 24ஆம் தேதி நோயாளி கருப்பையா மரணமடைந்த விட்டார். 

இதனால் மனமுடைந்த கருப்பையாவின் குடும்பத்தினர் 28 ஆம் தேதி மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறாமல் கட்டப்பட்ட இரண்டாவது தவணை பணத்தை திரும்ப கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நீலம்பூர் ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நிர்வாகத்தின் மீது இறந்த கருப்பையாவின் மகன் நரேஷ்குமார் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

அதில் சம்பந்தப்பட்ட நீலம்பூர் ராயல் கேர் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதாகவும் சிகிச்சையை விட கூடுதலாக அளித்த பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்