Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும்: பேட் கம்மின்ஸ்

மே 28, 2021 10:24

இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம்தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று முதன் சாம்பியன் பட்டத்தை வெல்வர் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த போட்டி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளும் கடந்த 2 மாதங்களில் எவ்வித டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் நிலவும் சூழல் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறை எனக்குப் பிடித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அது மேலும் கடினமானது. இருந்தாலும் இது சிறந்த நடைமுறை. ஒவ்வொரு டெஸ்ட் தொடரும், வெறும் டெஸ்ட் தொடருக்காக அல்லாமல் அதையும் தாண்டி அதில் ஒரு நோக்கம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’’ என்றார்.
 

தலைப்புச்செய்திகள்