Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 சர்வேஷ் அறக்கட்டளை சார்பில் உதவி

மே 27, 2021 07:33

 

தாம்பரம்: தாம்பரத்தில் முன்களப்பணியாளர்கள், ஆதரவற்றோர்கள் என ஆயிரம் பேருக்கு சர்வேஷ் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக முதல் தளர்வுகள் இல்லா முழு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர், துப்புரவு பணியாளர்கள், மாற்றுதிறனாளிகள் உணவின்றி மிகவும் கஷ்டப்பட்டு வரும் சூழ்நிலையில் சர்வேஷ் சார்டபிள் டிரஸ்ட் சார்பில் ஆயிரம் பேருக்கு உணவு வழஙகப்பட்டது.

அறக்கட்டளையின் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவுகள் வழஙகப்பட்டன. மேலும் காவல் பணியில் ஈடுபடும் போலீசார், 

கொரோனா தடுப்பூசி போடும் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என முன்களப்பணியாளருக்கும் மதிய உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழஙக்கப்பட்டது. உடன் சர்வேஷ் சார்டபிள் டிரஸ்ட் தலைவர் சரவணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்