Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நோய் தோற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

மே 27, 2021 07:16

தஞ்சாவூர், மே.27: கொரோனா நோய் தோற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிலை அலுவலர்களுடன் கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் முன்னிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ்  உடன் இருந்தார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மருத்துவக் காப்பீடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க மறுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். 

ஆக்சிஜன் படுக்கை என்பது தற்போது போதிய அளவில் உள்ளது. மற்ற மாவட்டங்களை கணக்கிடும்போது தஞ்சாவூரில் படுக்கை வசதி போதுமானதாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் 18 ஆயிரம் தற்காலிக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

முன்னதாக மாவட்ட பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு ரூ.1கோடி மதிப்புள்ள 10,000 பயனானிகளுக்கு பயன்படும் வகையில் 25 பொருட்கள் அடங்கிய அவசரகால நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். பிளாக் டுளிப்ஸ், நிர்வாக மேலாளர் யாகியா ரூபாய் 11 லட்சம் மதிப்புள்ள 15 எண்ணிக்கையிளான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

மேம்பாலம் காதுகேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளுக்கு சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை பார்வையிட்டும், ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் கொரோனா நோயாளிகள் பயன்படுத்த கூடிய அறையினை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், உணவுகள், சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டிருந்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக், சஞ்சய், சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன்,.டி.கே.ஜி.நீலமேகம்,அசோக்குமார் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்