Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனது மருமகன் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா: சாஹித் அப்ரிடி

மே 26, 2021 10:00

பாகிஸ்தான் அணியின் முன்னாள அதிரடி பேட்ஸ்மேன் சாஹித் அப்ரிடி. இவரது மகளை தற்போது பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனது மகளுக்கும், ஷாஹீன் ஷாவிற்கும் இடையில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பதை சாஹித் அப்ரிடி உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளின் திருமணம் குறித்து சாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘ஷாஹின் ஷா எனது வருங்கால மருமகன் ஆக இருக்கிறார். தற்போது எனது மகள் படிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் டாக்டர் படிக்க விரும்புகிறார். மீதமுள்ள படிப்பை பாகிஸ்தானில் தொடர்வது அல்லது இங்கிலாந்தில் படிப்பது குறித்து முடிவு செய்யவில்லை.

அவர்களுடைய நிச்சயதார்த்தம் உறுதி செய்யப்படும்வரை இருவருக்கும் தொடர்பு கிடையாது. ஷாஹீன் ஷா குடும்பத்தினர் என்னுடைய குடும்பத்தினருடன் இதுகுறித்து பேசினர். இரு குடும்பதத்தினரும் தொடர்பில் இருந்து அதன்பின் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என அல்லா விரும்பினால், அது நடக்கும். ஷாஹீன் ஷா தொடர்ந்து விளையாட்டிலும், விளையாட்டிற்கு வெளியிலும் சிறப்பாக செயல்பட வேண்டு என நான் பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்