Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்துக்கு ரெயில் மூலம் 1024 டன் ஆக்சிஜன் சப்ளை - தெற்கு ரெயில்வே தகவல்

மே 24, 2021 11:21

சென்னை: கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்தியன் ரெயில்வே இயக்கி வரும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 14-ந் தேதி மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. அதன் மூலம் 80 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து ஜார்கண்ட், ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலமாக சென்னை தண்டையார்பேட்டை, கோவை மதுக்கரைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. இதுவரை தமிழகத்துக்கு 15 ஆக்சிஜன் ரெயில் வந்துள்ள நிலையில், நேற்று 16-வது ஆக்சிஜன் ரெயில் சென்னை தண்டையார்பேட்டைக்கு காலை 11.45 மணிக்கு வந்தது. அதில் 84.1 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை 1024.18 டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு வந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்