Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 595 பேருக்கு கொரோனா

மே 23, 2021 05:47

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள்
இரும்பு தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் உள்ள பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில்
சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று
வருகிறார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு
அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும் என்றும்,
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 158 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 71 பேரும், கிராம பகுதியில் 78
பேரும், பேரூராட்சி பகுதியில் 9 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்