Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது- கண் கலங்கிய பிரதமர் மோடி

மே 22, 2021 06:32

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக பிரதமர் மோடி இன்று வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கொரோனா தொற்றின் 2-வது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக
இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என கண்கலங்கிய படி கூறினார். கொரோனாவால் தங்களது
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனாவிற்கு எதிரான நமது தற்போதைய போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இது நாம் பதட்டமில்லாமல் இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம்
செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்