Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை- அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

மே 20, 2021 06:27

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிகவரித்துறை முதன்மை செயலாளருமான
எம்.ஏ.சித்திக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தற்போது வரை 15 ஆயிரத்து 137 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 8 லட்சத்து 41
ஆயிரத்து 806 நபர்கள் பயனடைந்து உள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 17-ந் தேதி மட்டும் 19 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை நாளொன்றுக்கு 25 ஆயிரம் என்ற அளவுக்கு
அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இணை கமிஷனர் சங்கர்லால் குமாவத், துணை கமிஷனர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்