Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழை

ஏப்ரல் 22, 2019 11:22

சென்னை : தமிழகத்தில், தற்போது நீலகிரி மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து வருகிறது. 
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. 

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இன்று முதல் 24ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. 
 
இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் குன்னுார், வெலிங்டன் மற்றும் பெர்போர்ட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் அழகிய மண்டபம் பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.  
 

தலைப்புச்செய்திகள்