Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

மே 20, 2021 06:00

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி
அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி ஜூன் 26-ந்தேதி தொடங்குகிறது.

இந்த மூன்று தொடர்களிலும் விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். டி20 புகழ் கிறிஸ் கெய்ல், அந்த்ரே ரஸல்,
சிம்ரன் ஹெட்மையர் அணியில் இடம் பிடித்துள்ளனர் பொல்லார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் பூரன் துணைக் கேப்டனாக
நியமிக்கப்பட்டுள்ளார்.

18 பேர் கொண்ட வெஸ்ட் அணி:-

1. பொல்லார்டு (கேப்டன்), 2 நிக்லோகஸ் பூரன் (துணைக் கேப்டன்), 3. ஆலன், 4. பிராவோ, 5. காட்ரெல், 6. பிடெல் எட்வர்ட்ஸ், 7. பிளெட்சர், 8. கிறிஸ் கெய்ல், 9.
ஹெட்மையர், 10. ஹோல்டர், 11. அகியல் ஹொசைன், 12. எவின் லிவிஸ், 13. மெக்காய், 14. ரஸல், 15. லென்டில் சிம்மன்ஸ், 16. சின்கிளைர், 17. ஒசானே, 18.
ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.
 

தலைப்புச்செய்திகள்