Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாம்பரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாய் வழஙகும் திட்டத்தை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொடங்கி வைத்தார்

மே 16, 2021 09:39

தாம்பரம்: தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் ஊரடங்கு கால நிவாரன நிதியாக குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழஙகும் திட்டத்தை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொடங்க வைத்தார்.

கொரோனா காலத்தில் முழு ஊரடஙகு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4 ஆயிரம் வழஙகப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் முதல் கட்ட தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.  

அதன்படி தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிவாரண தொகையை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழஙகினார். தொடர்சியாக பல்வேறு இடஙகளுக்கு சென்று ரேஷன் கடைகளில் முறையாக நிவாரண உதவி வழஙகப்படுகிறதா என்பதையும் எம்.எல்.ஏ.ஆய்வு செய்தார்.

தலைப்புச்செய்திகள்