Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்தீஸ்கரில் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு

மே 16, 2021 07:58

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த 4-ம் தேதி இந்த உத்தரவானது மே 15-ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதனை
முன்னிட்டு ஆளும் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து,
மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க
அனுமதிக்கப்படும்.

இதேபோல் சந்தையில் உள்ள கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் மாற்றம் எதுவும் தேவைப்பட்டால் வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி ஆட்சியர்கள் மற்றும் போலீசார் முடிவு செய்வார்கள்.

அனைத்துக் கடைகளும் வேலை நாட்களில் 5 மணிக்கு பின்னர் அடைக்கப்படும். மாநிலத்தில் ஊரடங்கு நீக்கப்படாது. கொரோனா தொற்று சூழ்நிலை அடிப்படையில், தளர்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்