Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல்

ஏப்ரல் 22, 2019 07:31

டெல்லி: ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என விமர்சித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

அந்த வகையில், உச்சநீதிமன்றம் ரஃபேல் விவகாரத்தில் பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனை குறித்து பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "மோடியை நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது" என கூறினார். இதனை எதிர்த்து பாஜக -வின் நிர்வாகி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கில் இன்று தனது பிராமண பத்திரத்தை தாக்கல் செய்த ராகுல் காந்தி, அந்த சம்பவத்திற்காக தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே அப்படி பேசியதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்